Sunday, December 23, 2012

ஆதினம் Vs இந்து அறநிலைய துறை

இந்த தலைப்பில் வெகு நாட்களாகவே எழுத வேண்டும் என்று ஒரு ஆர்வம. எதற்கு மத சார்பற்ற ஒரு நாட்டில் ஒரு மத வழிபாட்டு தலங்களை நிர்வகிக்க தனியாக ஒரு துறையே வேண்டும். அப்படி என்றால் நம் அரசு மதங்களை வளர்க்கிறதா? என்று பெரிய ஐயம்!!! ஆனால் சமிப காலங்களாக பல கோவில்களுக்கு சென்று வந்ததில் நிறைய தெரிந்து கொண்டேன். (நன்றி: எனக்கு விழுப்புரத்தில் பணி வழங்கிய அரசுக்கு!!)



எதற்கு இந்த இந்து அறநிலைய துறை...? ஏன் இந்த ஆதினங்கள்...? இவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன...? இப்படி பல கேள்விகள்...!!

இந்து அறநிலைய துறை என்று தனியாக துறை இந்தியாவில் தென் மாநிலங்களில் மட்டுமே இருக்கிறது. இந்து மதங்கள் வடஇந்தியாவிலும் பரவி இருந்தாலும்கூட தென் மாநிலங்களில் குறிப்பாக சுதந்திரத்திற்கு முந்தைய தமிழகத்தில் வேருன்றி செழிப்பாக இருந்தது. இவற்றையெல்லாம் ஆதினங்களும் மடாதிபதிகளும் இன்னும் பிற பரம்பரை குடும்பங்களும் நிர்வகித்து வந்தன. கணக்கில் கொண்டு வர முடியாத அளவிற்கான சொத்துக்கள்..அளவிட முடியாத எண்ணிக்கையில் தங்க ஆபரணங்கள் இவர்களால் நிர்வகிக்க பட்டது.

இதில் ஆதினங்களால் நிர்வகிக்க பட்ட கோவில்கள் சமுக காரியங்களில் ஈடுபட்டன. அன்னதானங்கள், கல்வி, சமுக வளர்ச்சி போன்ற காரியங்களில் ஈடுபட்டன. ஆனால் சில கோவில்கள் தனிப்பட்ட குடுபங்களின் கையில் இருந்தன. இதை கவனித்த ஆங்கில அரசு கோவில்களை நிர்வகிக்க சில அமைப்புகளை ஏற்படுத்தின. அவை சில பல மாற்றங்கள் பெற்று இன்று இந்து அறநிலைய துறையாக அரசாங்கத்தின் ஒரு அமைப்பாக செயல்படுகின்றன. நன்றாக செயல்படும் ஆதின கோவில்கள் தொடர்ந்து ஆதினங்களின் கட்டுபாட்டில் தொடர்கின்றன.



சரி என்னடா இவன் ஆதினம் Vs இந்து அறநிலைய துறை அப்படினு தலைப்பு வெச்சிட்டு எதை எதையோ பேசிட்டு இருக்கானு நினைத்தால் இதோ விஷயத்துக்கு வருகிறேன்.

  1. ஆதினம், அரசு இரண்டுமே கடவுள், பக்தி, நம்பிக்கை என்று ஒரே விஷயத்தில் இணைத்து விடுகின்றன.
  2. ஆதினங்கள் மனிதர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன, அரசு பணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.(ஆதினங்களில் உள்ளே பணம் கொடுத்தால் போதும், அரசு கோவில்களில் உள்ளே செல்லவே பணம் கொடுக்க வேண்டும்)
  3. ஆதினங்கள் கருவறைகளை மட்டும் சுத்தமாக வைக்கின்றன, அரசு கோவில் அலுவலகங்களை சுத்தமாக வைக்கின்றன.(அமைச்சர்கள், அதிகாரிகள் வரும்போது மட்டும் கோவில்கள் பளபளக்கும்)
  4. ஆதினங்கள் தன் கோவிலின் மகிமையை வெளியே சொல்ல மறுக்கின்றன, அரசு விளம்பரபடுதுகின்றன.(அங்கே பொறுப்பு பறிபோய்விடும் என்று பயம், இங்கு பணம் பறிபோய்விடும் என்று பயம்)
  5. ஆதினங்கள் இருப்பதை காக்க நினைக்கின்றன, அரசு இல்லாததை வளர்க்க நினைக்கின்றன.(இருக்கும் நம்பிக்கை, இல்லாத மகிமை)
  6. ஊழல் நடந்தால் சம்மந்தப்பட்டவர்கள் ஆதினங்களில் பயனடைவார்கள், அரசில் சம்மந்தமே இல்லாத மூன்றாம் நபர் பயனடைவார்)
  7. ஆதினத்தில் விபூதி, குங்குமம் கையில் கிடைக்கும், அரசில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.(அங்கே தட்டில் பணம் போட்டால், இங்கே சிறப்பு தரிசனத்தில் சென்றால்)
  8. ஆதினத்தில் கற்பூரம் ஏற்றலாம், அரசில் பணம் இருந்தால்தான் விளக்கே ஏற்ற முடியும்.
  9. ஆதினத்தில் புகைப்படம் எடுக்கலாம், அரசில் பணம் இருந்தால் எடுக்கலாம்.(செல்போன் விதிவிலக்கு. ஆனால் புகைப்படம் எடுத்தால் தீட்டாகும்)
  10. ஆதினத்தில் அத்துமீறி போனால் அபத்தம், அரசில் அத்துமீறி போனால் அபராதம்.

ஆக இரண்டுமே ஒன்றையே செய்கின்றன. வியாபாரம். கடவுளை, நம்பிக்கையை, பக்தியை, முடிவாக தனி மனிதனை...!!!






1 comment:

  1. It's 100% true friend.thanks for such a interesting ost.

    ReplyDelete